Tuesday 28 May 2019

சுய தொழில் முனைவோருக்கான தொழில் வாய்ப்புகள்



"சுய தொழில் தொடங்க வேண்டுமென்ற கனவு...
ஆழ்ந்த சிந்தனையாக நிலை கொண்டு...
தீவிர எண்ணங்களாக மாறி ...
சோதனைகள் என்னும் கரையை கடந்தால் தான்
கனமழை என்னும் வெற்றியை பெற முடியும்!"

இனி வரும் காலங்களில், இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாவதை விட சுய தொழில் தொடங்குவதற்குத்தான்  வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். அப்படி தொடங்குவதாக இருந்தால் சமுதாய வளர்ச்சிக்கும், மனித வளத்திற்கும் மற்றும் சுற்று சூழலுக்கும் நன்மை தருவதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.  அதை நோக்கித் தான் லெக்ஸி பிரிண்ட் இன்னோவேட்டின் தொழில் நுட்பங்களும், திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

ஒவ்வொரு இளைஞனும் தமது மன உறுதியையும், ஆர்ப்பரிக்கும் ஆற்றலையும் செம்மையாக பயன்படுத்தி சிறந்த மனிதனாக செதுக்க வல்லது சுய தொழில் என்பது ஆணித்தரமான உண்மை. இன்றைய போட்டி மிகுந்த சமுதாயத்தில் தமக்கென்று ஒரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவது சுய தொழில்தான் என்றால் மிகையாகாது.

சிறிய தொழிலானாலும் விடா முயற்சியுடன் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் மூலதனமாக கொண்டவர்கள் வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்தவர்கள் ஏராளம். அந்த அடிச்சுவடை பின்பற்றி இன்றைய இளைஞர்கள் நேர்மறை எண்ணங்களை மனதில் உருவாக்கிக் கொண்டு, பிறர் தயவை நாடாமல் நம்முடைய உழைப்பையும், திறமையையும் பயன்படுத்தி தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து தொழில் தொடங்குவதால் தாமும் பயனடைந்து கொண்டு, பிறருக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி மற்றவர்களின் சந்தோஷத்திலும் பங்கு எடுத்துக் கொள்ளலாம்.

தொழிலில் உள்ள சவால்களைக் கண்டு சுய தொழில் தொடங்க தயங்குபவர்கள், தங்கள் தன்னார்வத்தையும், ஆக்கப்பூர்வ சிந்தனையையும்
தூண்டும் வகையில் தனித்துவமான தொழில்நுட்பங்கள் எங்களிடம் இருக்கிறது பல, அதில் உங்கள் பார்வைக்கு சில.

  • டைல்ஸ் பிரிண்டிங் தொழில்
  • உட் பிரிண்டிங் தொழில்
  • கிளாஸ் பிரிண்டிங் தொழில்
  • கிளாஸ் எட்சிங் தொழில்
  • அக்ரிலிக் பிரிண்டிங் தொழில்


இன்னும் எண்ணற்ற புதுமையான பிரிண்டிங் தொழில்நுட்பங்கள் இன்றைய இளைஞர்களின் பட்ஜெட்டில் அடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பிய தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுத்து தொடங்குவதிலிருந்து நீங்கள் தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்துதல் வரை உள்ள அனைத்து சவால்களையும் முறியடித்து தொழிலில் வெற்றி பெறத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும், உதவிகளையும் உங்கள் தேவையறிந்து வழங்குகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

தொழில் தொடங்க விரும்புவோர் மேலும் கூடுதல் விவரங்கள் பெற... +91-9626574745.